தென்னிலங்கை அரசியல்வாதிகளால் தமிழர்களுக்கான தீர்வில் சிக்கல்! சிங்கள அமைச்சர் கவலை

Report Print Ajith Ajith in அரசியல்

அதிகார பரவாலக்கம் தொடர்பில் புதிய அரசியலமைப்பில் என்ன இருக்கிறது என்று தெரியாமலேயே பலர் அதனை பற்றி குறைக்கூறுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன

தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளின் மாறுப்பட்ட கருத்துக்கள் காரணமாகவே இலங்கையின் அரசியலில் பல்வேறு சாதகமான சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டன என்றும் அமைச்சர் ஊடகம் ஒன்றிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

1950ஆம் ஆண்டு முதல் இந்த நிலைமை தொடர்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலானோருக்கு இன்று நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. எனினும் அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை நாடாளுமன்றில் தேவை.

இந்நிலையில் பொதுத்தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலே இடம்பெறும் என்றும் அமைச்சர் சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Latest Offers