இராணுவத்தினரின் போர்க்குற்றம் தொடர்பில் சஜித் வெளியிட்ட கருத்து

Report Print Vethu Vethu in அரசியல்

இராணுவத்தினருக்கு எதிராக போர்க் குற்றம் சுமத்தும் ஜெனீவா யோசனையை தான் நிராகரிப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

போர்க் குற்றச்சாட்டுக்களை தான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அமைப்பு ஒன்றுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி வரை இராணுவத்தினர் போர்க் குற்றங்களில் ஈடுப்படவில்லை.

அப்படி ஈடுபட்டிருந்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers