யாழ். மாநகரசபை மேயரை சந்தித்த இலங்கைப் பெண்ணான ஒஸ்லோ மாநகர பிரதி மேயர்

Report Print Sujitha Sri in அரசியல்

இலங்கையில் பிறந்து நோர்வே நாட்டிற்கு புலம்பெயர்ந்த, ஒஸ்லோ மாநகர பிரதி மேயரான கம்சாயினி குணரட்னம், யாழ். மாநகரசபை மேயரான இம்மானுவல் ஆர்னோல்ட்டை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு நேற்று பகல் அளவில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கம்சாயினி நேற்றைய தினம் வட மாகாண பெண்கள் அமைப்புக்களுடனும் யாழ்ப்பாணத்திலுள்ள விடுதியொன்றில் வைத்து கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது குறித்த பெண்களுடன், பெண் தலைமைத்துவம், பெண்களின் அரசியல் பிரவேசம், ஈழத் தமிழர்களின் போருக்குப் பின்னரான நிலைப்பாடு போன்ற பல விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மேலும், 2015ஆம் ஆண்டு ஒஸ்லோவில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் களமிறங்கிய கம்சாயினி, நோர்வேயின் வயது குறைந்த பிரதி மேயர் என்ற பெருமையை தட்டிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers