ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான அரசியல் முன்னணியில் சிவில் குழுக்கள்?

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்படவுள்ள அரசியல் முன்னணியில், சிவில் குழுக்களையும் இணைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன்படி 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு உதவிய சிவில் குழுக்கள் இந்த அரசியல் முன்னணியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே கட்சிகள் என்ற அடிப்படையில் ஜாதிக ஹெல உறுமய, தமிழ் முற்போக்கு கூட்டமைப்பு, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இந்த அரசியல் முன்னணியில் இணைகின்றன.

இதேவேளை இந்த அரசியல் முன்னணியில் 10 உறுப்பினர்களை கொண்ட இணைத் தலைவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

அரசியல் முன்னணியில் பெரிய கட்சி என்ற வகையில் தவிசாளர் பதவி ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கவுள்ளது.

எனினும், தமது கட்சிக்கு அடையாளம் கிடைக்காத வகையில் அமைக்கப்படும் இந்த முன்னணிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு பிரிவினர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

Latest Offers