தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் மஹிந்த அணியின் நிலைப்பாடு

Report Print Gokulan Gokulan in அரசியல்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை வேதனமாக 1000 ரூபாவை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி. ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

மத்திய வங்கி கொள்ளையர்களின் தற்போதைய ஆட்சி தொடர்பில் மக்களின் கருத்தை தெரிந்துக் கொள்ள எந்த நேரத்திலும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் தயாராக இருக்கின்றது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜக்சவின் 55 நாள் ஆட்சிக்காலத்தில் பெருந்தோட்ட தொழிலாளர் அடிப்படை சம்பளம் தொடர்பில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்து இறுதி கட்டத்தை அடைந்த நிலையில் 900 ரூபாய் அடிப்படை சம்பளம் வரையில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டு இருந்தது.

அத்தோடு எரிவாயு, எரிபொருளின் விலைகள் குறைக்கப்பட்டதை மக்கள் அறிவார்கள்.

இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பின் படி அமைச்சர்களின் கையொப்பங்கள் செல்லுபடியற்றது என அறிவித்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் மக்களின் கருத்தை அறிந்து கொள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க நாம் தயாராக இருக்கின்றோம். அத்தோடு சில அமைச்சின் செயலாளர்கள் சுற்று நிரூபத்திற்கு எதிர்மாறாக தொழில் தேவையானவர்களுக்கு தொழில் வழங்கி வருகின்றனர்.

இவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க தீமானித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Latest Offers