பெண் அரசியல்வாதியின் வீடு இனந்தெரியாத நபர்களால் சேதம்

Report Print Rusath in அரசியல்

மட்டக்களப்பு - கல்லடிப் பகுதியில் உள்ள தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த 2 சீசீரிவி காணொளிக் கமராக்கள் திருடப்பட்டதோடு மேலும் ஒன்றுக்கு சேதம் விளைவிக்கப்பட்டிருப்பதாக பெண்ணொருவர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்லடி - முதலாம் குறுக்கை அண்டிய பகுதியில் வசிக்கும் ஸ்ரீ லங்கா சுகந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் போட்டியிட்ட லோஜினி மகேந்திரா என்பவரின் வீட்டிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது வீட்டின் பிரதான நுழைவாயிலில் பொருத்தப்பட்டிருந்த 3 சீசீரீவி கமராக்களில் இரண்டு அகற்றப்பட்டிருப்பதாகவும் மேலும் ஒரு கமரா இயங்க முடியாத அளவுக்கு சேதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சேதமாக்கப்பட்ட கமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் படி சந்தேக நபரின் நடமாட்டமும், தோற்றமும் தெரிவதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Latest Offers