பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம்

Report Print Mubarak in அரசியல்

அரசாங்க பாடசாலைகளுக்கு விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் 3,850 பேரை நியமிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் இன்று தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களாக நேர்முகப்பரீட்சையை முடித்துவிட்டு நியமனம் வழங்குவதில் இழுபறியாக இருந்து வந்த 3850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனங்களை வழங்க இன்று அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அமைச்சர் றவூப் ஹக்கீம் மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட போதே அதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதற்காக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திற்கு நன்றியை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers