மீண்டும் ரெஜினோல்ட் குரே வேண்டும்! யாழில் ஆர்ப்பாட்டம்

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

வடக்கு மாகாண ஆளுநராக மீண்டும் ரெஜினோல்ட் குரேயை நியமிக்க கோரி யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்னாக இன்று திங்கட்கிழமை காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சிவன் அறைக்கட்டளை நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் சாவகச்சேரி சமுத்தி பயனாளிகள், சித்த மருத்துவ மாணவர்கள் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவில் உள்ள கிராம மட்ட அமைப்புக்களினை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் கலந்து கொண்டனர்.

இப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை தமிழ் மொழி பேசக் கூடியவராக இருக்கின்ற நிலையில் தமது தேவைகளை உடனடியாக தீர்த்துக் கொள்ளக் கூடியதாக இருந்தது என்பது உட்பட அவருக்கான நற்சான்றிதழ்களை வழங்கியிருந்தனர்.

மேலும் மீண்டும் வடக்கு மாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரேயை நியமிக்க கோரிய மூன்று மகஜர்களை யாழ்.மாவட்ட உதவி அரசாங்க அதிபர் தெய்வேந்திரம் சுகுணரதியிடம் கையளித்தனர்.

Latest Offers