ரணில் விக்ரமசிங்கவின் சதித்திட்டங்கள்! அச்சத்தின் உச்சம்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

நாமல் குமாரவினால் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் பொலிஸார் முறையான விசாரணைகளை நடத்தி முடியும்வரைக்கும் அவர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வது சாட்சிகளை வலுவிழக்கச்செய்யும் செயலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அங்கு பேசிய அவர்,

நாமல் குமாரவுக்கு எதிரான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் அவரால் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பான விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அவரை விசாரணை செய்ய முற்படுவதில் சதித்திட்டங்கள் இருக்கலாம்.

நாமல் குமாரவினால் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் பொலிஸார் முறையான விசாரணைகளை நடத்தி முடியும்வரைக்கும் அவர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வது சாட்சிகளை வலுவிழக்கச்செய்யும் செயலாகும்.

அதனால் நாமல் குமாரவுக்கு உரிய பாதுகாப்பை வழங்கி, பொலிஸாரின் அழுத்தங்கள் எதுவும் இல்லாமல் வாழ இடமளிக்கவேண்டும்.

இதேவேளை, எதிர்க்கட்சிகள் இணைந்து அமைக்கவிருக்கும் கூட்டணி தொடர்பில் அரசாங்கம் அச்சமடைந்துள்ளது. அதனை எப்படியாவது குழப்பவேண்டும் என்பதற்காக பல்வேறு சதித்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க எமது கூட்டணியில் இணையவிருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிலரை குழப்பி வருகின்றார். இது அவரின் சதித்திட்டமாகும். அதேபோன்று ஊடகங்களும் எமது கூட்டணி தொடர்பாக பாரிய பிரசாரம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றன என்றார்.

Latest Offers