பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைத்த ரணில்!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

கட்சிக்குள் ஏற்பட்ட சில முரண்பாடுகளை பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தீர்த்து வைத்துள்ளார் என கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்னர் நேற்றிரவு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெற்றதாக தெரிவித்துள்ள அவர்,

கட்சியிலுள்ள பின்னாசன நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கருத்து முரண்பாடு காணப்பட்டது. கட்சியித் தலைவர் அதனை சுமூகமான முறையில் தீர்த்து வைத்துள்ளார். எமது கட்சிக்குள் தப்பொழுது அமைச்சுப் பதவி குறித்து பிரச்சினை எழமாட்டாது என்றார்.

மீண்டுமொரு அமைச்சரவைச் சீர்திருத்தம் இடம்பெறுவதாக கூறப்படுகின்றதே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers