முன்னாள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சரின் மறைவு பாரிய இழப்பு!

Report Print Thirumal Thirumal in அரசியல்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட தொழிற்சங்கவாதி எஸ்.அருள்சாமி மறைந்தமை இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு பாரிய இழப்பு என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் காலஞ்சென்ற சந்தனம் அருள்சாமி பூதவுடல் ஹட்டன் டன்பார் மைதானத்தில் இன்று மாலை 5 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.

இதில் கலந்து கொண்டு இரங்கல் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

அருள்சாமின் இழப்பு எனது வலது கையை இழந்ததது போல் எண்ணுகிறேன். அருள்சாமி அவரின் இறுதி மூச்சு வரை தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் தீர்க்க தரிசனத்துடன் தனது நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தார்.

தோட்டத் முதலாளிமார் சம்மேளனத்துடன் இடம்பெற்ற ஒவ்வொரு பேச்சுவார்த்தையிலும், சகல ஆலோசனைகளையும் அனைத்து முன்னெடுப்புகளையும் எனது தரப்பில் அவர் முன்னெடுத்து வந்தார்.

இன்று அவரின் மறைவினால் அடுத்து இரண்டு நாட்களில் பேசப்படும் இறுதி பேச்சுவார்த்தையில் எவ்வாறு நான் செயல்பட போகின்றேன் என்ற ஒரு நிலை இவரின் மறைவினால் உருவாகியுள்ளது.

இருந்தபோதிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் மறைந்த தலைவர்களின் ஆசீர்வாதம் எனக்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கிடைத்தது போல மறைந்த அருள்சாமியின் ஆசீர்வாதமும் எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தை மனதில் தாங்கி உயிர் நீத்த இவரின் ஆத்ம சாந்தியடைய வேண்டும் என்றால் ஒற்றுமையை பலப்படுத்தி நம்பிக்கையுடன் மக்கள் இருக்கும் பொழுது நிச்சியமாக சம்பள உயர்வு கிடைக்கும் என்பதில் எந்தவொரு அச்சமும் இல்லை.

இதன்போது அவரின் ஆத்மா சாந்தியடைய கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து சம்பள உயர்வை பெற்றே தீர வேண்டும் என்று தனது இரங்கலில் கூறியுள்ளார்.

Latest Offers