கூட்டத்தில் மன்னிப்புக் கோரிய மைத்திரி!

Report Print Kamel Kamel in அரசியல்

அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு உறுப்பினர் கூட்டத்தில் இன்று பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

இந்த ஆண்டில் தேர்தல் ஒன்றை பெற்றுக் கொள்வதற்கு நாடாளுமன்றிற்கு உள்ளேயும், வெளியேயும் அரசாங்கத்தின் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட வேண்டும்.

இந்த ஆண்டில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அரசாங்கமொன்றை நிறுவ வேண்டும். சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்றுள்ள சம்பவம் குறித்து நான் கவனம் செலுத்தி வருகின்றேன்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் வெளியிடப்பட்டு வரும் கருத்துக்கள் குறித்து கவலையடைகின்றேன்.

இந்த விடயம் தொடர்பில் எவருக்கேனும் மன வருத்தம் இருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகின்றேன் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Latest Offers