29 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைக்கும் மகிந்த தரப்பு!

Report Print Murali Murali in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து பாரிய கூட்டணி ஒன்றை அமைப்பதற்கு, 29 கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மினுவாங்கொட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மாத்திரமே செயற்பாட்டு ரீதியான கட்சியாக இருக்கின்றது.

நான் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை பெற்று விட்டேன். 2015 ஜனவரி மாதமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி விட்டேன்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers