அடுத்த ஜனாதிபதி யார்? முடிவு மகிந்தவின் கைகளில்

Report Print Murali Murali in அரசியல்

2020ஆம் ஆண்டு ஜனாதிபதி யார் என்பதை எதிர்க் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவே தீர்மானிப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த தெரிவித்துள்ளார.

அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும், பொதுஜன பெரமுனவும் இணைந்து புதிய கூட்டணியமைப்பது தற்போது உறுதியாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

2020ஆம் ஆண்டு ஜனாதிபதி யார் என்பதை மகிந்த ராஜபக்சவே தீர்மானிப்பார். இரண்டு கட்சிகளின் கொள்கையை முன்னிலைப்படுத்தி வெற்றி பெறுபவரையே மகிந்த வேட்பாளராக களமிறக்குவார்.

அரசாங்கத்தை எதிர்கட்சியே விமர்சிக்கும். ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தை கட்சியினரே கடுமையாக சாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

நிலையற்ற அரசாங்கம் ஒன்று உருவாகுமாயின் அதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவை முழுமையாக கிடைக்கப் பெற்றிருக்கும் என” அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers