நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது போகும்! தேரர் எச்சரிக்கை

Report Print Murali Murali in அரசியல்

நாட்டில் மீண்டும் யுத்தம்,கொலை மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவை தலைதூக்குவதை தவிர்க்க முடியாது போகும் என கொடபொல அமர கீர்த்தி தேரர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டை பிளவடையச் செய்ய முயற்சி செய்வதாகவும், இதனால் ஒரு போதும் நல்லிணக்கம் ஏற்படப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“தேர்தலின் போது வாக்களித்த மக்கள் தமது தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்றே கோரினார்கள். மாறாக இராணுவத்தினர் மீது விசாரணை நடத்துமாறு கோரவில்லை.

புதிய அரசியலமைப்பு மக்களுக்காக உருக்கப்படவில்லை. ஜெனிவாவிற்காகவும், சம்பந்தன் மற்றும் விக்னேஸ்வரனுக்காகவே உருவாக்கப்படவுள்ளது.

எனவே மக்களும் இதற்கு எதிராக போராட வேண்டும். அதற்காக நாம் மக்களை வழிநடத்துவோம். புதிய அரசியலமைப்பினை உருவாக்கி அதன் மூலம் நாட்டை பிளவடையச் செய்ய முயற்சிக்கின்றனர்.

இவ்வாறு செயற்படும் பிரிவினைவாதிகளால் ஒரு போதும் நல்லிணக்கம் ஏற்படப் போவதில்லை. மாறாக மீண்டும் யுத்தம்,கொலை மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவையே தலை தூக்கும்” என மேலும் கூறியுள்ளார்.

Latest Offers