வெளியானது விசேட வர்த்தமானி அறிவித்தல்!

Report Print Murali Murali in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா விலகியதால் ஏற்பட்ட வெற்றிடமான இடத்துக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சாந்த பண்டாரவை பெயரிடும் விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து, அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இந்நிலையில், கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா இன்று உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers