மகிந்தவுக்கு எதிராக ரணில் வைத்துள்ள தந்திரப்பொறி! உறுப்புரிமையை பறிக்க திட்டம்

Report Print Murali Murali in அரசியல்

மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட 47 நாடாளுமன்ற உறுப்பினர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமையை பறிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சுமந்திரனின் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு தடையாக தற்போது நாடாளுமன்றத்தில் பொறுப்பு வாய்ந்த எதிர் கட்சி ஒன்று செயற்படுகின்றது.

இது அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடியினை ஏற்படுத்தும். இந்நிலையிலேயே, மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட 47 நாடாளுமன்ற உறுப்பினர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமையை பறிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதனிடையே, இறுதிக்கட்ட யுத்தக்குற்றச்சாட்டுக்கள் இடம் பெற்றதாக தெரிவித்துக்கொண்டு இன்றும் ஒரு சில தரப்பினர் கடந்த அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுகின்றனர்.

யுத்தத்திற்கு தலைமை தாங்கியவர்களையும், 54 இராணுவ வீரர்களையும் சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலைப்படுத்தி தண்டனை பெற்றுக் கொடுப்பேன் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்ட நிர்வாக பணிப்பாளர் யஸ்மின் சூக்கா குறிப்பிட்டுள்ளார்.

இது எதிர்காலத்தில் பாரிய நெருக்கடியினை இலங்கைக்கு ஏற்படுத்தும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers