அமைச்சரவை பிரச்சினை தீராவிட்டால் நீதிமன்றம் செல்வோம்: சுஜீவ சேனசிங்க

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

அமைச்சரவை அந்தஸ்த்துடைய அமைச்சுக்களை நியமிப்பதில் எழுந்துள்ள குழப்பநிலைக்கு உரிய தீர்வுகள் கிடைக்காவிட்டால் நீதிமன்றினையே நாடுவோம் என விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,

அமைச்சுக்களை நியமிப்பதில் காணப்படும் குழப்பநிலைக்கு உரிய தரப்பினர் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபடுவதன் மூலமே தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இல்லாவிட்டால் இந்தக் குழப்பமான சூழ்நிலையினைத் தீர்ப்பதற்கு நீதிமன்றத்தின் தீர்ப்பினைப் பெற்றுக்கொள்ளும் நிலைபாட்டில் ஐக்கிய தேசிய கட்சி உள்ளது.

நாட்டினது அபிவிருத்தியினை கருத்திற்கொண்டு அமைச்சுக்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள முடியும்.

ஆனால் அரசாங்கத்தின் செலவுகளைக் குறைக்க வேண்டுமானால் அமைச்சுக்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதே சிறந்தது என்றார்.

Latest Offers