மைத்திரிக்கும் வடக்கு கிழக்கு மக்களுக்கும் இடையிலிருக்கும் பந்தம்! கூட்டமைப்பினால் உடைக்க முடியாது

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடிப்படைவாத உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கும், வடக்கு கிழக்கு மக்களுக்கும் இடையிலான பந்தத்தை இல்லாது செய்ய முயற்சிக்கின்றனர் என சிறிலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியினரின் செய்தியாளர் சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது. இதன்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடிப்படைவாத உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கும், வடக்கு கிழக்கு மக்களுக்கும் இடையிலான பந்தத்தை இல்லாது செய்ய முயற்சிக்கின்றனர். ஆனால் அது நடக்காது.

நாட்டுக்கு பொருத்தமான அரசியல் யாப்பு ஒன்றுக்கு தாங்கள் ஆதரவு வழங்க தயாராக இருக்கிறோம். சிறிலங்கா சுதந்திர கட்சியில் எந்த பிளவுகளும் ஏற்படவில்லை.

சுதந்திர கட்சியின் பல்வகை நிலைப்பாடுகளைக் கொண்டுள்ள அனைவரும் ஒன்றிணைந்து ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஜனாதிபதியை, எதிர்கட்சித் தலைவர் முழுமையான கூட்டணியை அமைத்து அரசாங்கத்தை உருவாக்கும் பின்புலத்தை ஏற்படுத்த இருக்கிறார்.

ஐக்கிய தேசிய கட்சி பலமாக இருக்கிறது என்பது உண்மையாக இருந்தால், தாங்கள் உடனடியாக தேர்தலை நடத்துமாறு கோருகின்றோம்.

எவ்வாறாயினும், தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வடக்கு கிழக்கு மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான பந்தத்தை இல்லாது செய்துவிட முடியாது என்றார்.

Latest Offers