மைத்திரி - மகிந்தவிற்கு எதிராக சந்திரிக்காவின் புதிய அவதாரம்? சூடு பிடிக்கும் கொழும்பு அரசியல் களம்

Report Print Murali Murali in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல்கள் நடைபெற்றுவருவதாகவும் கொழும்பு அரசியல் தகவல்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிகாகியுள்ளன.

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி கதிரையில் அமரவைத்து அழகு பார்த்ததில் சந்திரிக்காவிற்கு பாரிய பங்குண்டு.

எனினும், அண்மை காலமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணைந்துகொண்டு அரசியல் காய்நகர்த்தல்களை முன்னெடுத்துள்ளதுள்ளார்.

இது சந்திரிக்காவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், மைத்திரி மற்றும் சந்திரிக்காவிற்கு இடையில் மோதல் நிலையையும் உருவாகியுள்ளதாக அறியமுடிகின்றது.

இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஸ்ட ஆலோசகர்களில் ஒருவரான சந்திரிக்காவை பல்வேறு விடயங்களில் மைத்திரி புறக்கணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறான பின்னணியில் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை பதவி விலக செய்து, அவரின் இடத்திற்கு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருவதாக கொழும்பு அரசியலில் இருந்து அறிய முடிகின்றது. எவ்வாறாயினும் இது தொடர்பில் சந்திரிகா தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

தனது தந்தை உருவாக்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சந்திரிக்கா ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டார் என சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல்கள் நடைபெற்றாலும் இறுதி தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers