ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி ஏற்றுக்கொண்டு நான்கு ஆண்டுகள் பூர்த்தி

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி ஏற்றுக்கொண்டு நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

ஜனநாயக தேசிய முன்னணியின் பொது வேட்பாளராக அன்னப்பட்சி சின்னத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன 62 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுக் கொண்டு எதிர்த்து போட்டியிட்ட மஹிந்த ராஜபக்சவை தோற்கடித்தார்.

இந்த நிலையில் ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து கொண்டு நான்கு ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு நாடு முழுவதிலும் மத வழிபாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, இனி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட முடியும் என்பது என்பது குறிப்பிடத்தக்கது.