நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் யார்? இன்று வெளிவரவுள்ள அறிவிப்பு

Report Print Rakesh in அரசியல்

2019ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு கூடவுள்ளது.

இதன்போது நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை சபாநாயகர் உத்தியோகபூர்வமாக அவைக்கு அறிவிப்பார்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சாந்த பண்டார சத்தியப் பிரமாணம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை பெறுவதற்காக ஹில்புல்லாஹ், எம்.பி பதவியை இராஜிநாமா செய்ததால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.