வட மாகாண ஆளுநரின் மறுபக்கம்! சிங்களவர்களால் விரட்டப்பட்ட சுரேன்! வெளிவரும் தகவல்

Report Print Vethu Vethu in அரசியல்

வட மாகாண புதிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்ததாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வட மாகாண ஆளுநராக நேற்றைய தினம் ஜனாதிபதி முன்னிலையில் சுரேன் ராகவன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

தமிழர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டமை குறித்து, தமிழ் சமூகத்திற்கு அப்பால் தென்னிலங்கை மக்களும் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் புதிய ஆளுநரின் ஆரம்ப காலங்கள் மிகவும் சவால்மிக்கதாக காணப்பட்டதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த சிங்களவர்களாலும் வெறுக்கப்பட்டு, பல அவமானங்களுக்கு முகங்கொடுத்தவராக சுரேன் உள்ளதாக குறிப்பிடபட்டுள்ளது.

1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 24ஆம் திகதி தென்னிலங்கை மக்கள் அவரை அடித்து துரத்தியுள்ளனர். அதற்கு முன்னர் இருந்து அவர் கள்ளத் தோணி, தமிழர், நாடார் என சிங்களவர்கள் வசை பாடியுள்ளன.

பாடசாலைக்கு புதிய சீருடை அணிந்து செல்லு போது ஆடையில் வர்ணபூச்சுக்களை பூசினர். புதிய பாதணி அணிந்து சென்றால் அதனை பறித்து கொண்டார்கள். வகுப்பறையில் முதலாவது மாணவனாகும் போது அவரது பாடசாலை பைக்குள் சாணி அடித்தார்கள். பரீட்சையில் பார்த்து எழுகின்றாரா என கண்காணிப்பதற்கு பரீட்சை கண்கானிப்பாளராக பெற்றோர் நியமிக்கப்படுகின்றார்கள். அவ்வாறான ஒரு பின்னணியிலேயே அவர் வாழ்க்கையில் முன் வந்தார்.

தென்னிலங்கை மக்களால் அசிங்கப்படுத்தப்பட்டாலும், முன்னணி சிங்கள பத்திரிகையில் பணியாற்ற ஆரம்பித்துள்ளார்.

1990களில் சந்திரிக்கா தெற்கின் விடுவிப்பாளராகும், தமிழ் மக்களின் கனவு நாயகியாகவும் அரசியலுக்குள் பிரவேசிக்கும் போது சுரேன், இணைந்து செயற்பட்டார். அவர் சந்திரிக்காவின் வெற்றிக்காக செயற்பட்டுள்ளார்.

எனினும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பௌத்தம் தொடர்பான கற்கைகளை முன்னெடுத்துள்ளார். இதன்போது அவர் கனடா பல்கலைக்கழகத்தில் சேவையில் ஈடுபட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தவுடன் இலங்கை வந்த அவர் மீண்டும் தன்னார்வமாக கொழும்பு பல்கலைக்கழகத்தில் இணைந்து செயற்பட்டு வந்துள்ளார். அங்கும் அவர் சில சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளார்.

சிங்கள தமிழ் இணைந்த குடும்ப பின்னணியை கொண்ட அவர் வடக்கு ஆளுனராக செயற்படுவதற்கான தகுதிகளை கொண்டுள்ளார் என குறித்த ஊடகம் பாராட்டு தெரிவித்துள்ளது.

Latest Offers