கோத்தபாய தொடர்பில் மற்றுமாரு விசாரணை

Report Print Steephen Steephen in அரசியல்

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வு திணைக்களம், மிக் விமான கொள்வனவு குறித்த கொடுக்கல், வாங்கல்கள் பற்றி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வெளியிட்ட கருத்து சம்பந்தமாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

2007ஆம் ஆண்டு ஓகஸ்ட் 19ஆம் திகதி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தகவல்கள் கூறுகின்றன.

இதற்கு அமைய அந்த தொலைக்காட்சி நிறுவனத்திடம் குறித்த நிகழ்ச்சியின் பிரதி ஒன்றை பெற்று தருமாறு நீதிமன்றத்தின் ஊடாக குற்றப் புலனாய்வு திணைக்களம் அனுமதியை பெற்றுள்ளது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க, கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி தெஹிவளை அத்திட்டிய பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டார்.

மிக் விமான கொள்வனவில் நடந்த ஊழல் குறித்து அவர் கடந்த 2007ஆம் ஆண்டு சன்டே லீடர் பத்திரிகையில் கட்டுரை ஒன்றையும் எழுதியிருந்தார்.

லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளதுடன் அந்த கொலை சம்பந்தமாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. எனினும் இதுவரை எவருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers