மைத்திரி - மகிந்த கூட்டணியை துரிதமாக ஏற்படுத்த வேண்டும்! விமல் வீரவங்ச

Report Print Steephen Steephen in அரசியல்

பிரிவினைவாத அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்படுவதை தடுக்க வேண்டுமாயின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய கூட்டணி துரிதமாக ஏற்படுத்தப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியது.

அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, அரசாங்கம் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதை இலக்காக கொண்டு வரவு செலவுத் திட்டம் கொண்டு வரவுள்ளதாக கூறியுள்ளார்.

Latest Offers