இப்படியொரு ஜனாதிபதியா...? பிரமிக்க வைக்கும் மைத்திரி!

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடு குறித்து ஜனாதிபதியின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் எரிக் வீரவர்தன தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் 16 மணித்தியாலங்கள் மக்களுக்காக ஜனாதிபதி பணியாற்றுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மிகவும் சிறந்த அரசியல் தலைவர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

அரசியலில் ஈடுபடுவதற்காகவே தான் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் பதவியிலிருந்து விலகியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் ​தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ளதாகவும், ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளராகக் கடமையாற்றிக் கொண்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது.

அதன் காரணமாகவே அந்தப் பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்தேன். பிரத்தியேகச் செயலாளர் பதவியிலிருந்து விலகினாலும் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளராகக் கடமையாற்றுவேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதியின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் எரிக் வீரவர்தன இந்தத் தகவலை வெளியிட்டார்.