தோல்வியை வெளிப்படையாக ஏற்றுக் கொண்ட மைத்திரி!

Report Print Steephen Steephen in அரசியல்

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்தினால், நான்கு ஆண்டுகளாக ஊழல், மோசடிகள் மற்றும் வீண் விரயத்தை இல்லாமல் செய்ய முடியாது போயுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

லக்கல புதிய நகரத்தை இன்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்து நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளது.

புதிய ஆண்டும் பிறந்துள்ளது. இந்த நான்கு ஆண்டுகளில் மக்களின் ஜனநாயகத்தை வலுப்படுத்த முடிந்தது. சுதந்திரம் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

சுதந்திரமான ஊடகம், சுதந்திரமான நீதித்துறை ஏற்படுத்த முடிந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடிந்தது. அதில் வெற்றியும் உள்ளது. தோல்வியும் உள்ளது.

கிடைத்த வெற்றி குறித்து பேசுவது போல், அடைந்த தோல்விகளை வெற்றிகளாக மாற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.

பெற்ற வெற்றி பற்றி பேசவில்லை. அடைந்த தோல்விகள் என்ன. நல்லாட்சியின் எண்ணக்கருக்களான ஊழல், மோசடிகள், கொள்ளை, வீண் விரயத்தை தடுப்பதில் நாம் தோல்வியடைந்துள்ளோம். தோல்விகளை வெற்றிகளாக மாற்ற நாம் திடசங்கற்பத்துடன் ஒன்றிணைய வேண்டும்.

நாட்டின் பிரதான சவாலாக மாறியுள்ள ஊழல், மோசடி, கொள்ளை மற்றும் வீண் விரயம் என்பது அரசியல்வாதிகள் முதல், கீழ் மட்டம் வரை சென்ற மிகப் பெரிய தேசிய அனர்த்தமாக மாறியுள்ளது. அவற்றை தடுத்து நிறுத்த நாம் கைகோர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.