மக்களை சந்திக்கவுள்ள கிழக்கு மாகாண புதிய ஆளுநர்

Report Print Abdulsalam Yaseem in அரசியல்

கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக பதவியேற்ற எம். எல். ஏ. ஹிஸ்புல்லா நாளைய தினம் மக்களை சந்திக்கவுள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நாளை காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 6 மணி வரை கிழக்கு மாகாண ஆளுநர் எம். எல். ஏ. ஹிஸ்புல்லாவை சந்திக்க முடியும் என ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக பதவியேற்று முதல் தடவையாக இடம்பெறும் மக்கள் சந்திப்பு இதுவாகும்.

மக்களுடைய பிரச்சினைகளை திருகோணமலையிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்திற்கு வருகை தந்து தெரியப்படுத்த முடியும் எனவும் திணைக்கள அதிகாரிகளின் ஊடாக கலந்துரையாடி உடனடியாக தீர்வு வழங்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.