தயான் ஜயதிலக்க தூதுவர் பதவிக்கு தகுதியற்றவர்: பிமல் ரத்நாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

ரஷ்யாவுக்கான இலங்கையின் தூதுவர் தயான் ஜயதிலக்க அரசியல் சார்ந்து செயற்பட்டுள்ளதால், அவர் நாடாளுமன்றத்தின் சிறப்புரிமையை மட்டுமல்லாது தூதரக சேவை சம்பந்தப்பட்ட உடன்படிக்கையையும் மீறியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 26 ஆம் திகதி நடந்த அரசியல் சதித்திட்டத்திற்கு சார்பாக தயான் ஜயதிலக்க, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விட அதிகமாக கருத்து வெளியிட்டிருந்தார் எனவும் அவர் கூறியுள்ளார்.

தூதுவர் பதவியில் இருந்து கொண்டு தயான் ஜயதிலக்க அரசியலில் ஈடுபட முடியாது.

இது சம்பந்தமாக நாடாளுமன்றத்தின் உயர் அதிகாரிகள் சம்பந்ததான தெரிவுக்குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இது குறித்து ஆராய்ந்து பார்க்குமாறு வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கின்றேன் எனவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers