மஹிந்த ராஜபக்ஷவினால் 8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம்!

Report Print Gokulan Gokulan in அரசியல்

நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ஷவினால் 8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வஜிராஷ்ராம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ஷவால் 8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்ப்பட்டுள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுவது உண்மையானால், 2018 ஆண்டுக்குறிய சரியான அந்நிய செலவானி விபரங்களை மத்திய வங்கி உத்தியோக பூர்வமாக வெளியிட வேண்டு எனவும் தெரிவித்துள்ளார்.