ஐ.தே.கட்சியின் எம்.பிக்களின் பிரச்சினையை தீர்க்க குழு நியமனம்

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அமைச்சர் கபீர் ஹாசிம் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குழுவின் ஏனைய உறுப்பினர்களாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், ரஞ்சித் மத்தும பண்டார, நவீன் திஸாநாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு அரசாங்கத்தில் பதவிகளை வழங்குமாறு கோரி வருகின்றனர். சிலர் இதனை ஊடகங்களில் வெளிப்படையாக கூறியுள்ளனர்.