திருகோணமலையில் அமெரிக்க கடற்படை முகாமா?

Report Print Rakesh in அரசியல்

திருகோணமலையில் அமெரிக்க கடற்படை தளமொன்றை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளதா என்று விமல் வீரவன்ஸ நாடாளுமன்ற சபையில் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியுள்ளது.

சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல் உட்பட தினப்பணிகள் முடிவடைந்த பின்னர், இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தை வெளிவிவகார அமைச்சர் ஆரம்பித்து வைத்துள்ளார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ஸ,

"அமெரிக்க கடற்படைக்கு தேவையான சேவைகளை வழங்குவதற்குரிய முகாமொன்று கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் அமைப்பதற்கு அரசு இணக்கம் வெளியிட்டுள்ளதா, அத்தகையதொரு முடிவு எடுக்கப்பட்டுள்ளதா?” என்று வினா எழுப்பியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன,

"இது வெளிவிவகார அமைச்சுடன் தொடர்புபட்ட விடயமல்ல. பாதுகாப்பு அமைச்சிடம்தான் கேட்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Latest Offers