பண்டாரநாயக்கவின் 120 வது நினைவு தினத்தில் மைத்திரிபால மற்றும் சந்திரிகா!

Report Print Gokulan Gokulan in அரசியல்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

காலிமுகத்திடலிலுள்ள பண்டாரநாயக்க நினைவு தூபிக்கு முன்னால் இன்று இலங்கையின் முன்னாள் பிரதமர்களுள் ஒருவரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகருமான எஸ்.S.W.R.D பண்டாரநாயக்கவின் 120 வது நினைவு தினம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அமரர் பண்டாரநாயக்கவின் சிலைக்கு தற்போதைய சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் மலர் மாலை அணிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆகியோருக்கிடையில் கருத்துப் பரிமாறல்கள் இடம்பெறவில்லை என்பதுடன் மலர்மாலை அணிவித்த நிகழ்வுடன் ஜனாதிபதி உடனடியாக வெளியேறியுள்ளார்.

குறித்த நிகழ்வில் சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருக்கிடையில் நீண்ட கருத்து பரிமாறல் இடம்பெற்றுள்ளது.