நாடாளுமன்றத்தில் முக்கிய விடயத்திற்கு 24 எம்.பிக்களின் ஆதரவு தேவை

Report Print Steephen Steephen in அரசியல்

உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அரசாங்கத்திற்கு மேலும் 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதனால், நாடாளுமன்ற உறுப்பினர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கட்சி தாவல்களின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியிடம் 101 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் 107 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜே.வி.பிக்கு 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளதுடன் எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கும் அரசாங்கத்தின் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை கூட்டினால், அரசாங்கத்தின் விரிவான கூட்டணியில் 127 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

சபாநாயகருக்கு வாக்களிக்க முடியாது என்பதால், சமஷ்டி அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க அரசாங்கத்திடம் 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். சமஷ்டி அரசியலமைப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற 150 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அப்படியானால் இன்னும் 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவைப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்று புதிய அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்படும் என சுமந்திரன் எப்படி கூறுகிறார். இலங்கையில் மிகப் பெரிய கட்சித் தாவல் கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்தது. கரு ஜயசூரிய உட்பட ஐக்கிய தேசியக்கட்சியின் 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் இணைந்தனர். மக்களின் ஆதரவுடன் பயங்கரவாதத்தை தோற்கடிக்கவே அரசாங்கத்தில் இணைந்தனர். அரசாங்கத்தில் இணைந்த அனைவருக்கும் அமைச்சு பதவி வழங்கப்பட்டது.

ஆனால், நாட்டில் கடும் எதிர்ப்பு காணப்படும் சமஷ்டி அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்ற 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைய வேண்டும். அத்துடன் எவருக்கும் அமைச்சு பதவிகளை வழங்க முடியாது.

இதனால், சமஷ்டி அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு ஆதரவளித்து, எதிர்க்கட்சியின் 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers