மகிந்த - தயாசிறி ஆகியோருக்கு இடையில் கருத்து மோதல்?

Report Print Murali Murali in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கண்டித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தின் போது மகிந்த ராஜபக்ச இவ்வாறு பேசியுள்ளதாக அறியமுடிகின்றது.

முன்னாள் ஜனாதிபதியை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து பணியாற்ற முன்வருமாறு தயாசிறி ஜயசேகர அழைப்பு விடுத்திருந்த நிலையிலேயே மகிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் என்றால் அவர் கட்சிக்கு திரும்பி தம்முடன் இணைந்து பணியாற்றவேண்டும்.

மற்றொரு கட்சியுடன் இணைந்து பணியாற்ற முயன்றால் அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்புரிமையை இழக்கவேண்டியிருக்கும்.

முன்னாள் ஜனாதிபதி தான் சுதந்திரக்கட்சியின் ஆயுட்கால உறுப்பினர் என்கிறார், கட்சியின் ஆலோசகர் என்கிறார். இது குறித்து அவரிடம் கேள்வியெழுப்ப தீர்மானித்துள்ளோம்” என தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கண்டித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் ஊடகஅறிக்கைகளை வெளியிடும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும் எனவும், சதிமுயற்சியில் ஈடுபடுபவர்களை பலப்படுத்தும் விதத்தில் கருத்துக்களை வெளியிடக்கூடாது“ என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Latest Offers