மைத்திரியை சாடைப் பேசிய சந்திரிக்கா! புகைப்படத்தை நீக்கி ஜனாதிபதி ஊடக பிரிவு அதிரடி

Report Print Murali Murali in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் பிரதமருமான எஸ்.டப்ளியூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் 120 ஜனன தின நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கலந்துகொண்ட புகைப்படங்கள் எதனையும் ஜனாதிபதி ஊடகபிரிவு வெளியிடவில்லை.

எனினும், குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏனைய முக்கியஸ்தர்களும் நிற்கும் படங்களை மட்டும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.

அமரர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் 120 ஜனன தின நிகழ்வு கொழும்பில் இன்று இடம்பெற்றிருந்தது, இதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

எனினும், இதன்போது சந்திரிகாவும், மைத்திரிபால சிறிசேனவும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சந்திரிக்கா, “பண்டாரநாயக்கவின் பெயர் மற்றும் கொள்கைகளை விற்று சாப்பிட்ட திருடர்களும் கொலைகாரர்களும் இந்த நாட்டில் இன்னும் இருப்பதாகவும், அவர்கள் தற்போதும் பண்டாரநாயக்கவின் பெயரையும் கொள்கைகளையும் விற்று சாப்பிட்டு வருகின்றனர் எனவும் கடுமையாக பேசியிருந்தார்.

இதன் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, சந்திரிகா மறைமுகமாக தாக்கி பேசியதாகவே கருத்து வெளியிட்டு வரும் நிலையில், ஜனாதிபதி ஊடக பிரிவு அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.

“அமரர் பண்டாரநாயக்கவின் 120வது ஜனன தின நிகழ்வுப் படங்களில் சந்திரிகா நிற்கும் எந்தவொரு படங்களையும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிடவில்லை.

எனினும், ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் இருக்கும் புகைப்படங்களை மாத்திரம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers