மைத்திரி - மகிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த தகவல்கள் வெளியாகின?

Report Print Murali Murali in அரசியல்

தேர்தல் ஒன்றை நடத்தி அதன் மூலம் அதிகாரத்தை கைப்பற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன், முதல் வாய்ப்பிலேயே அதிகாரத்தை தக்க வைத்துகொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்சி உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“அடுத்து இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியின் சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அல்லது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடுவார்கள்.

தேர்தல் ஒன்றை நடாத்தி அதிகாரத்தை கைப்பற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தயாராகவிருப்பதாக இருக்கின்றது. முதல் வாய்ப்பிலேயே அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவுள்ளதாக” அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers