ரணிலை வீழ்த்த மகிந்த தரப்பின் புதிய வியூகம்!

Report Print Murali Murali in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண 28 அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“ஒரு பரந்துபட்ட கூட்டணி ஒன்றை அமைக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண 28 அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது.

அடுத்த தேர்தலில் ரணில் தலைமையிலான அரசாங்கத்தை தோற்கடிக்கும் நோக்கில் இந்த புதிய கூட்டணி அமைக்கப்படவுள்ளதாகவும்” அவர் மேலும் கூறியுள்ளார்.