யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் வெளியிட்டுள்ள கருத்து!

Report Print Murali Murali in அரசியல்

யுத்தக்குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதாக இருந்தால் உள்நாட்டிலே இடம்பெறும் என அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன், இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்போவதாக எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தில் எந்த உண்மையும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“ராஜதந்திர பதவிகளுக்கு தகுதியற்றவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பில் எங்களுக்கு பிரச்சினை இருக்கின்றது. இதனால் நாட்டின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.

அதனால் அரச சேவையில் அனுபவம்வாய்ந்த நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தகுதியானவர்கள் எதிர்காலத்தில் இராஜதந்திர தூதுவர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கூறியுள்ளார்.

இதேவேளை, யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றத்தை நாடாது உள்ளக விசாரணைகள் மூலமாக தீர்வு காண முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “வடக்கு கிழக்கில் இறுதி யுத்தத்தில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதை மறுக்க முடியாது, அதேபோல் தெற்கிலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன.

இவை குறித்த விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். எனினும் சர்வதேச நீதிமன்றத்தை நாடாது உள்ளக விசாரணைகள் மூலமாக தீர்வு காண முடியும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.