பாரிய அரசியல் கூட்டணி அமைக்க 28 அரசியல் கட்சிகளுடன் பேச்சு!

Report Print Ajith Ajith in அரசியல்

பாரிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைப்பதற்காக பொதுஜன பெரமுன 28 அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்திவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் லஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் அதிகாரத்தை குறைப்பதே இதன் நோக்கம் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதன் ஒருக்கட்டமாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள், மொரட்டுவ மாநகரசபையில் பொதுஜன பெரமுனுவுடன் இணைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

19வது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் தேர்தல் முறையில் மாற்றத்தை கொண்டு வருவதாக கூறிய சபாநாயகர், தற்போது அதனை மறந்து விட்டார்.

அதற்கு பதிலாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கும் திட்டத்தை 20வது அரசியலமைப்பு திருத்தமாக கொண்டு வர அவர் முன்னுரிமை வழங்குகிறார் என்றும் யாப்பா குற்றம் சுமத்தினார்.