கணக்கு தெரியாத சுமந்திரன் எம்.பி! உண்மையை சொல்லி அசிங்கப்படுத்திய அரசியல்வாதி

Report Print Vethu Vethu in அரசியல்

புதிய அரசியலமைப்பினை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, அதற்கான ஆதரவினை பெற்றுக்கொள்ள போதுமான உறுப்பினர்கள் ஆதரவு இல்லை என பிவிதுரு ஹெல உருமய கட்சி தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

திட்டமிடப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பினை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற 24 உறுப்பினர்களின் குறைப்பாடு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திரிப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கட்சி மாறிய பின்னர் தற்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு 101 உறுப்பினர்களே உள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் 6 பேரை சேர்த்தால் 107 பேர் மாத்திரமே உள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் 14 பேரும், மக்கள் விடுதலை முன்னணியில் 6 பேர் உள்ளனர். அவர்களை சேர்த்தால் 127 பேராகும்.

சபாநாயகரினால் வாக்களிக்க முடியாது என்பதால் நாட்டை பிரிக்கும் அரசியலமைப்பிற்கு வாக்களிக்க 126 பேர் மாத்திரமே உள்ளனர்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தால் மாத்திரமே பெடரல் அரசியலமைப்பினை சமர்ப்பிக்க முடியும். அதற்கு நாடாளுமன்றத்தில் 150 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

அதற்கமைய சமகால அரசாங்கத்திற்கு மேலும் 24 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாக உள்ளது. இவ்வாறான நிலையில் 21 சுதந்திர கட்சி உறுப்பினர்களின் ஆதரவை பெற்று அரசியலமைப்பு சமர்ப்பிக்கப்படும் என சுமந்திரனால் எவ்வாறு கூற முடியும்?

சுமந்திரனின் கணக்கு தற்போது பிழைத்துள்ளது. 21 அல்ல 24 பேரின் ஆதரவு இன்றி அரசியலமைப்பினை சமர்ப்பிக்க முடியாது. இந்த அரசியலமைப்பினை சமர்ப்பிக்க ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.