வடக்கு மாகாண ஆளுநர் விவகாரம்! மைத்திரி - மஹிந்தவுக்கு இடையில் மோதல்

Report Print Vethu Vethu in அரசியல்

வட மாகாண ஆளுநராக தனக்கு நெருக்கமானவரை நியமிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையை, ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.

இரண்டு மாகாணங்களுக்கான ஆளுநர்களின் பெயர்களை மஹிந்த பரிந்து ரைசெய்த போதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை கண்டு கொள்ளவில்லை.

இந்தத் தகவலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பிரதானி ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

வட மாகாண ஆளுநராக கொழும்பிலுள்ள மயுராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயிலின் பிரதான பொறுப்பாளர் மற்றும் முன்னேஸ்வரன் கோயிலின் பொறுப்பாளர் சபையின் உறுப்பினருமான டீ.சுந்தரலிங்கத்தை நியமிக்குமாறு மஹிந்தவினால் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஜனாதிபதி அந்த கோரிக்கையை கண்டு கொள்ளாமல், பேராசிரியர் சுரேன் ராகவனை நியமித்துள்ளார்.

தனது கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்துள்ள நிலையில், மைத்திரி - மஹிந்தவுக்கு இடையில் அரசியல் ரீதியான மோதல் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால் பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமான பேராசிரியர் தம்ம திஸ்ஸ நாயக்கவை சப்ரகமுவ மாகாண ஆளுநராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தமை குறிப்பிடத்தக்கது.