தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு!

Report Print Ajith Ajith in அரசியல்

மாகாணசபைத் தேர்தல்களை விரைவில் நடத்துமாறு அரசாங்கத்துக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே ஆறு மாகாணசபைகள் தமது ஆயுட்காலத்தை முடித்த நிலையில் தேர்தல்களை எதிர்நோக்கியுள்ளன.

எனினும் அரசாங்கம் இன்னும் அவற்றுக்கான தேர்தல்களை நடத்த முன்வரவில்லை. புதிய தேர்தல் முறை காரணமாகவே இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் பழைய முறையிலாவது மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.