45 மில்லியன் ரூபாவுக்கு விளம்பரம் செய்த மஹிந்த!

Report Print Kamel Kamel in அரசியல்

கடந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு 45 மல்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளதாக அவைத் தலைவர், அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது பிரச்சார விளம்பரங்கள் செய்தமைக்காக சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு 45 மில்லியன் ரூபா செலுத்தப்பட வேண்டியிருந்தது.

இந்த கடன் நிலுவைத் தொகையில் ஒரு சதமேனும் மஹிந்த அரசாங்கம் செலுத்தவில்லை.

தற்பொழுது சுயாதீன தொலைக்காட்சி சேவையின் பாதுகாப்பு தொடர்பில் பேசுவது நகைப்பிற்குரியது.

சுயாதீன தொலைக்காட்சி, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு மஹிந்த அரசாங்கம் பாரியளவு தொகைகளை செலுத்த வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு பணம் செலுத்தப்பட வேண்டியது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.