வட மாகாணத்தின் புதிய ஆளுநர் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்!

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

புதிய வட மாகாண ஆளுநராக சுரேன் ராகவன் இன்று யாழ். பழைய பூங்கா வளாகத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

வடமாகாண ஆளுனராக கடமையாற்றிய ரெஜினோல்ட் குரே அண்மையில் ஜனாதிபதியினால் பதவி விலக்கப்பட்ட நிலையில், புதிய ஆளுநராக சுரேன் ராகவன் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை வட மாகாணத்திற்கு வருகை தந்த புதிய ஆளுநர் சுரேன் காலை 10 மணிக்கு தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இந்நிகழ்வினை தொடர்ந்து புதிய ஆளுனரை வரவேற்கும் நிகழ்வு ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.