விக்னேஸ்வரனை மகிழ்ச்சியில் ஆழ்த்திய வட மாகாண ஆளுநர்!

Report Print Vethu Vethu in அரசியல்

வட மாகாண புதிய ஆளுநராக சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டமை தொடர்பில், முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

வட மாகாணத்தின் ஆளுநர் பதவிக்காக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இந்த நியமிப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் விழிப்புணர்வு ஒன்று காணப்பட்டால் அந்த பிரச்சினைக்காக தமிழ் என்ற உணர்வுடன் செயற்படுவது அவசியமாகும்.

புதிய ஆளுநர் தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டு செயற்படுவார் என தான் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புதிய ஆளுநராக இன்று கடமைகளை ஏற்றுக்கொண்ட ஆளுநர் சுரேன் ராவகனுக்கு வாழ்த்துச் தெரிவிக்கும் போது முன்னாள் முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


You may like this video