நாடாளுமன்றத்தில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ள இலங்கை தமிழ் அரசு கட்சி

Report Print Dias Dias in அரசியல்

நாடாளுமன்ற அமர்வுகளில் சிறப்பாக செயற்பட்டவர்களின் தரவரிசைப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தரவரிசையில் முதலாமிடத்தில் மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவும், இரண்டாம் இடத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மானும், மூன்றாமிடத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசனமும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இந்த தரவு கடந்த வருடம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுகளையும் செயற்பாடுகளையும் மையமாக வைத்து திரட்டப்பட்டுள்ளது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தரவரிசை பின்வருமாறு,

முதலாமிடத்தில் அனுரகுமார திசாநாயக்க

இரண்டாம் இடத்தில் முஜீபுர் ரஹ்மான்

மூன்றாம் இடத்தில் ஸ்ரீநேசன்

நான்காவது இடத்தில் சுனில் ஹந்துநெத்தி

ஐந்தாவது இடத்தில் டக்ளஸ் தேவானந்தா

ஆறாவது இடத்தில் விமல் வீரசன்ச

ஏழாவது இடத்தில் கயந்த கருணாதிலக்க

எட்டாவது இடத்தில் ரோஹித அபேகுணவர்தன

ஒன்பதாவது இடத்தில் பிமல் ரத்னாயக்க

பத்தாவது இடத்தில் காஞ்சன விஜேசேகர