நான்கு நீதியரசர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம்

Report Print Steephen Steephen in அரசியல்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான பிரீதி பத்மன் சூரசேன, ஜீ.ஆர்.அமரசேகர மற்றும் எஸ்.துரைராஜா ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், உயர் நீதிமன்ற நீதியரசர்களாக சத்தியப் பிரமாணம் செய்துக் கொண்டனர்.

உயர் நீதிமன்றத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்காக ஜனாதிபதி அனுப்பியிருந்த பெயர்களுக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியது.

இதனையடுத்து இவர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டனர். அத்துடன் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக மேல் நீதிமன்ற நீதிபதி கே.பி. பெர்னாண்டோ இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

Latest Offers