மட்டக்களப்புக்கு விஜயம் செய்த நோர்வே அரசின் முக்கிய தமிழ் பெண்!

Report Print Kumar in அரசியல்

சிறந்த நகர் ஒன்றை உருவாக்க வேண்டுமானால் தற்போது மட்டக்களப்பு மாநகரசபையினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் போல் திட்டங்களை வகுக்க வேண்டும் என ஓஸ்லோ மாநகரின் பிரதி முதல்வர் ஹம்சாயினி குணரட்னம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்கு இன்று விஜயம் செய்து கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த வருகையின் போது மாநகரசபை முதல்வருடனான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதுடன் , தனது விஜயத்தினை குறிக்கும் வகையில் மரக்கன்று ஒன்றினையும் நாட்டியமை குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து மாநகரசபை மண்டபத்தில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று நடைபெற்றதுடன் சந்திப்பில் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.

குறிப்பாக மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகள் மற்றும் ஓஸ்லோ மாநகரசபையின் செயற்பாடுகள் தொடர்பிலும் இங்கு கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இதன் போது மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாநகரசபையானது உண்மையிலேயே சிறப்பான முறையில் செயற்பட்டுவருகின்றது.இங்கு கலந்துரையாடியதற்கு அமைய எதிர் காலத்தில் சிறந்த நகர் ஒன்றை உருவாக்க வேண்டுமானல் தற்போது மட்டக்களப்பு மாநகரசபையினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் போல் திட்டங்களை வகுக்க வேண்டும்.

எமது இயற்கையினை பாதுகாக்கும் விடயத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.அந்தவகையில் மட்டக்களப்பு மாநகரசபை மேற்கொண்டு வரும் செயற்பாடுகள் பாராட்டக்கூடியது.

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் மூன்றாவது பிள்ளையினை பெறுபவர்களுக்கு உதவி வழங்க எடுத்த நடவடிக்கையானது உண்மையில் சிறந்த ஒரு யோசனையாக நான் பார்க்கின்றேன்.

மாநகர சபையினை சிறந்த துறையில் முன்கொண்டு செல்லவேண்டும் என்ற சிந்தனையிருக்கும் போதே இவ்வாறான யோசனைகள் முன்வைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers