முல்லைத்தீவிற்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி

Report Print Dias Dias in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க முல்லைத்தீவு மாவட்டத்துக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்த புதிய ஆண்டின் முன்னாள் ஜனாதிபதியின் விஜயம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியை முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரி.கேதீஸ்வரன் வரவேற்றுள்ளார்.

வடக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான பொறுப்பு எமக்குண்டு என தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டமொன்றின்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிககும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவருடைய அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் மற்றும் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான பாதிப்புக்கள் தொடர்பிலும் இதன்போது கேட்டறிந்துள்ளார்.

குறித்த கூட்டத்தை தொடர்ந்து முல்லைத்தீவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான உபகரணங்களையும் முன்னாள் ஜனாதிபதி வழங்கி வைத்துள்ளார்.